Close
செப்டம்பர் 20, 2024 8:32 காலை

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில்(5.2.2022)  நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றியது:

நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தி ற்கு வருகை தந்துள்ள அனைவரையும்  வரவேற்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.  நீட் தேர்வு தொடர்பாக கூட்டப்பட்டிருக்கக்கூடிய இந்த இரண்டாவது கூட்டத்திற்கு எங்களு டைய அழைப்பை ஏற்று வந்தமைக்காக  மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை இரத்து செய்திட வேண்டும்.என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கி றோம் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அதையொட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு.

2006-ல் இதற்காக டாக்டர் அனந்தகிருஷ்ணன்  தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டியின்மூலமாக ஒரு அறிக்கையைப் பெற்று நுழைவுத் தேர்வை இரத்து செய்யும் சட்டத்தை நம்முடைய சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

அதுகுறித்து சற்று விவரமாக நாம் கூற வேண்டும் என்றால் டாக்டர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் 7.7.2006 அன்று ஒரு கமிட்டி அமைத்தோம். 13.11.2006 அன்று அறிக்கை பெற்றோம் 6.12.2006 அன்று சட்டமன்றத்தில் அதற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம்.

அந்தச் சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப் பட்டு. 3.3,2007 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதாவது 86 நாட்களில் ஆளுநரும், குடியரகத் தலைவருமே ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டது.

இப்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பு, ஒன்றிய அரசில் உள்ள மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இருக்கும் உயர் கல்வித் துறை 15.2.2007 அன்று தமிழ்நாட்டின் சட்டத்தை ஏற்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது.

அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான கருத்துகளை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவது உயர் கல்வியின் தரத்தை குறைக்காது. பிளஸ் 2 தேர்வுகள் மிகவும் நேர்மையானவை வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை.

ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ள ஆட்சேபணை இல்லை. இதைக் கூறியது தமிழ்நாடு அரசு அல்ல ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை அது மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போனது

இந்தத் துறையின்கீழ்தான் இப்போது சொல்லப்படுகின்ற நீட் தேர்வு வருகிறது. அந்த ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை. நுழைவுத் தேர்வினை ஒழிக்கும் அன்றைய தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவிற்கு குடியரகத் தலைவர் ஒப்புதல் அளிக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது

ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை அனைத்தும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த பிறகுதான் குடியரசுத் தலைவர் 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்தச் சட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் “சட்டம் செல்லும்” என்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் ஒரு சமூக நலன் சார்ந்த சட்டம்: சமூகநீதியை அடைய இது தேவை” என்று சொல்லியிருக்கிறது.

அதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டு மென்றால்- “lt is a Social Welfare Legislation to meet socal Justice” என்று அந்த அமர்வில் இருந்த நீதியரசர்கள் மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் தீர்ப்பளித்ததை நான் இங்கே கட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அப்படிப்பட்ட பிரத்யேசுமான நிலை, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது அதாவது. பிளஸ்-டூ மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவக் கல்வியிலும், பொறியியல் கல்வியிலும் சேர்த்துக் கொண்டிருந்தோம்.

இந்தச் சூழலில்தான் ஆட்சிப் பொறுப்பேற்ற தும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்  தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம் அந்தக் கமிட்டியின் அறிக்கையைப் பெற்று சட்டமன்றத்தில் விவாதித்திருக்கிறோம். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்தச் சட்டமுன்வடிவினை உடனடியாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையைச் செய்யவில்லை அதனால் நானே 27.11.2021 அன்று நேரில் சென்று ஆளுநரிடம்வலியுறுத்தியிருக்கிறேன். பிறகு எனது அமைச்சரவையிலே இடம்பெற்றி ருக்கக்கூடிய மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் 17.12.2021 அன்று ஆளுநரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்

அதுமட்டுமல்ல. 28.12.2021 அன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சென்று மனு அளித்து வலியுறுத்தியிருக்கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்க இயலாத சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அவசரமாக முதலமைச்சர் என்ற முறையில் கூட்டினேன் அதாவது 8.1.2022 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து ஆலோசனை களை எல்லாம் வழங்கினீர்கள். “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்” என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஜனவரி 12-ஆம் தேதி தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கானொலிக் காட்சி வாயிலாக பிரதமர் அவர்கள் திறந்து வைத் தார்கள் அப்போதுகூட கானொலி வாயிலாக வே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி நான் பேசியிருக்கி றேன். 17.1.2022 அன்று நம்முடைய நாடாளு மன்ற தலைவர் டிஆர்.பாலு  தலைமையில்  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது.

ஆனால், 2007-இல் 87 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், 13.9.2021-இல் நாம் நீட் தேர்வு தேவையில்லை மாணவர்களைக் கொல்லும் இத்தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் என்று நிறைவேற்றிய சட்டமுன்வடிவை நம்முடைய ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுற்று மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகே, சட்டமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று 1.2.2022 அன்று அதைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

அதற்கான செய்திக் குறிப்பில், நீட் தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டுகிறார். ஆனால் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத் தினுடைய 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் தொடர்புடையது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது அந்தத் தீர்ப்பு வேறு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோருகிறோம்.

குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் முன்பே ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியி ருக்கிறார். அதனால்தான் இந்த அசாதரண சூழல் குறித்து விவாதித்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூகநீதிப் போராட்டத் தை நடத்திட வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் உங்களை எல்லாம் அழைத்திருக் கிறோம்.

அடுத்தகட்டமாக நாம் என்ன செய்ய வேண் டும் என்பதற்கான ஆலோசனைகளை நீங்கள் அனைவரும் வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் இங்கே ஒரு வரைவுத் தீர்மானத்தைப் படிக்கவிருக்கிறார். அதன்மீது தாங்கள் அனைவரும் கருத்துகளை எடுத்துரைத்து, நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதையடுத்து,நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள்:

1. திமுக – அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன்

2. காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை

3. அதிமுக – பங்கேற்கவில்லை

4. பாரதிய ஜனதா கட்சி – பங்கேற்கவில்லை

5. பாட்டாளி மக்கள் கட்சி – வெங்கடேஸ்வரன்

6. மதிமுக – டாக்டர்.ரகுராமன்

7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தளி ராமசந்திரன்

8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – நாகை மாலி

9. விடுதலை சிறுத்தைகள் – சிந்தனைச் செல்வன்

10. மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா

11. தமிழக வாழ்வுரிமைக் கட்சி – வேல்முருகன்

12. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஈஸ்வரன்

13. புரட்சி பாரதம் – பங்கேற்கவில்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top