Close
நவம்பர் 22, 2024 12:32 காலை

உள்ளாட்சித்தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 64 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 64 மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 64 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை  செய்யப்பட்ட பின்னர் , தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதையொட்டி கடந்த 28-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி மாலை வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.ஈரோடு மாநகராட்சியில் கடந்த, 28 முதல் 4-ஆம் தேதி, 490 வேட்பு மனுக்கள் தாக்கலானது. நேற்றைய வேட்பு மனு பரிசீலனையில், 19 மனுக்கள் தள்ளுபடியாகி, 471 மனுக்கள் ஏற்கப்பட்டன. நான்கு நகராட்சிகளில், 517 மனுக்கள் தாக்கலாகி, 11 மனுக்கள் தள்ளுபடியாகி, 506 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மேலும், 42 பேரூராட்சிகளில் தாக்கலான, 2,294 வேட்பு மனுவில், 34 மனுக்கள் தள்ளுபடியாகி, 2,260 மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தம் தாக்கலான, 3,301 வேட்பு மனுவில், 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3 ஆயிரத்து, 237 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை, 10 மணி முதல் வேட்பு மனுவை வாபஸ் பெறுதல் நடக்கிறது. மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல், அவர்களுக்கான சின்னத்துடன் வெளியிடப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top