Close
மே 20, 2024 9:38 மணி

நாமக்கல் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக டாக்டர் கே.பி.ராமலிங்கம் அறிவிப்பு

நாமக்கல் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் (70) அறிவிக்கப்பட்டுள்ளார். 2.6.1954ல் பிறந்த ராமலிங்கம், ராசிபுரம் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பகவுண்டர் மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியல் பி.விஎஸ்சி கால்நடை மருத்துவம் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது தொழில், விவசாயம், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கால்நடை மருத்துவர். இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு டாக்டர் சிந்தாமணி என்ற மகளும் அதியமான என்ற மகனும் உள்ளனர். இவர் தற்போது ராசிபுரம் நகரில் கோனேரிப்பட்டியில் வசித்து வருகிறார்.
டாக்டர் ராமலிங்கம், கடந்த 1972 முதல் 1980-ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் மாணவர் பிரிவு தலைவராக பணியாற்றினார். 1990 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளராக செயல்பட்டு வந்தார். 1980 முதல் 1984 மற்றும் 1984 முதல் 1987-ஆம் ஆண்டு வரை ராசிபுரம் சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக பணியாற்றனார்.

பின்னர் திருச்செங்கோடு தொகுதியில் எம்.பியாக வெற்றிபெற்றார். 1999 முதல் 2009-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மைக்குழ உறுப்பினராக செயல்பட்டு வந்தார். 2010 முதல் 2016-ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக பணியாற்றினார். 2015-ஆம் ஆண்டு முதல் இயற்கை நீர் வளங்கள் உற்பத்தி இயக்க தலைவராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில துணை தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர், கட்சியின் மையக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top