Close
மே 12, 2024 8:13 காலை

நல்ல தொடக்கம்… நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

ஐபிஎல் போட்டி சென்னை அணி வெற்றி

ஐபிஎல் 2024  முதல் ஆட்டம் நடந்து முடிந்தது.நல்ல தொடக்கம், நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு.

தோனியின் தலைமைஇல்லாத அணியாக சிஎஸ்கே களத்தில். அணிக்கு கேப்டனாக இல்லாவிடினும் அணியில் தோனி இருப்பதே பலம் தான், அணிக்கு பக்க பலம் தான்.

நீங்கள் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள், மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள சிறந்த இடத்தை அவர்களுக்கு வழங்க முயற்சிக்கிறீர்கள்; அவர்கள் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் உள்ள விதத்தில் நீங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள்; அதே நேரத்தில், அவர்கள் வலுவாக இல்லாத பகுதிகளில் அவர்களை சீர்ப்படுத்தி ஆடுகளத்தில் ஜொலிக்க செய்கிறீர்கள்.” – இந்த வார்த்தைகள் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களால் உதிர்க்கப்பட்டவை.

இனிவரும் அணித்தலைவர்கள் இதை பின்பற்றினால் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ், தொன்று தொட்டு சிறப்பான துவக்க ஆட்டக்காரர்களை கொண்டு பவர் ப்ளேவில் நல்ல ரன்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் ஒரு அணியாக திகழும்.அடித்து தாக்குவோம். கோப்பையை தூக்குவோம்..

# சிஎஸ்கே அணி ரசிகர் இங்கிலாந்திலிருந்து சங்கர் 🏏#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top