Close
செப்டம்பர் 20, 2024 11:27 காலை

சமூக ஆர்வலர்கள் நடுநிலையாளர்களின் கவனத்தை ஈர்த்த புதுகை நகராட்சி 27 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் எஸ். மூர்த்தி

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 27 வது வார்டில் வீடு வீடாக வாக்கு சேகரித்த வேட்பாளர் மூர்த்தி

புதுக்கோட்டை நகராட்சியின்  27 -ஆவது வார்டில்  சுயேட்சையாக  களமிறங்கியுள்ள  வேட்பாளர்  எஸ். மூர்த்தி(கார்த்திக்மெஸ்) வீடு வீடாகச் சென்று தென்னை மரம் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர். இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியின்  27 –ஆவது வார்டில்  சுயேட்சையாகப் போட்டியிடும்  எஸ். மூர்த்தி தனது வார்டுக்குள்பட்ட   கீழ 2, 3  வீதிகள், சக்கர வர்த்தி அய்யங்கார் சந்து ராணியார் பள்ளி சந்து, பெருமாள் கோயில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து ஆகிய  பகுதிகளில்  வீடாகச் சென்று தென்னை மரம்   சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.  இவரது ஆதரவாளர்கள் அபிமானி கள், சமூக ஆர்வலர்கள் நடுநிலையாளர்கள் உடன்  சென்று  பிரசாரம் செய்தனர். இந்த வார்டில் ஆண் பெண் உள்பட மொத்தம் 2,992 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை
வாக்கு சேகரித்த 27 வார்டு வேட்பாளர் மூர்த்தி

வேட்பாளர் எஸ். மூர்த்தி கடந்த பல ஆண்டுகளாக சிவகாமிஅம்மாள் ரத்ததானக் கழகம் என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம் செய்து வருகிறார். சமூக ஆர்வலராக இருப்பதால் தனது வருமானத் தின் ஒரு பகுதியை எளியவர்களுக்கும்  வறியவர் களுக்கு  விளம்பரமின்றி  உதவிகளை செய்து வருகிறார். மேலும் இயற்கை விவசாயிகள் சங்கத் தில் ஈடுபாடு கொண்டு பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செயல் படுத்தி வருகிறார்.

இவர் அரசியல் கட்சி சார்பில் நின்றிருந்தால் ஒரு சாராரின்  ஆதரவை மட்டுமே பெற்றிருக்க முடியும். ஆனால் சுயேட்சையாக களம் காண்பதால் கட்சி சாராத நடுநிலையாளர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்களின் பெருவாரியான ஆதரவுடன் வார்டில் உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

புதுக்கோட்டை
27 வது வார்டு வேட்பாளர் மூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த சமூக ஆர்வலர்

இவர் தேர்தலில் நிற்கும் தகவலறிந்த நடுநிலை யாளர்கள் பலரும் இவரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும்  பலர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2  இடங்களில்  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட தைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு பிப்.19 -இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top