Close
நவம்பர் 22, 2024 6:12 காலை

புதுகை நகராட்சி 27 வது வார்டு வேட்பாளர் மூர்த்தி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 27 வது வார்டில் வாக்கு சேகரித்த வேட்பாளர் கார்த்திக்மெஸ் மூர்த்தி

புதுக்கோட்டை நகராட்சியின்  27 -ஆவது வார்டில்   களமிறங்கியுள்ள  வேட்பாளர் சமூக ஆர்வலர்   எஸ். மூர்த்தி (கார்த்திக்மெஸ்) வீடு வீடாகச் சென்று தென்னை மரம் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

புதுக்கோட்டை நகராட்சியின்  27 –ஆவது வார்டில்  சுயேட்சையாகப் போட்டியிடும் சமூக ஆர்வலர்  எஸ். மூர்த்தி தனது வார்டுக்குள்பட்ட   கீழ 2, 3  வீதிகள், சக்கர வர்த்தி அய்யங்கார் சந்து ராணியார் பள்ளி சந்து, பெருமாள் கோயில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து ஆகிய  பகுதிகளில்  வீடாகச் சென்று தென்னைமரம் சின்னத்திற்கு  செவ்வாய்க் கிழமை வாக்குகள் சேகரித்தார்.  இவரது ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் நடுநிலையாளர்கள் உடன்  சென்று வாக்குகள் சேகரித்தனர். இந்த வார்டில் ஆண் பெண் உள்பட மொத்தம் 2,992 வாக்காளர்கள் உள்ளனர்.

வேட்பாளர் எஸ். மூர்த்தி கடந்த பல ஆண்டுகளாக சிவகாமிஅம்மாள் ரத்ததானக் கழகம் என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம் செய்து வருகிறார். சமூக செயல்பாட்டாளரான இவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு    உதவிகளை செய்து வருகிறார். நம்மாழ்வார் காட்டிய வழியில்  இயற்கை விவசாயத்தையும் பல ஆண்டுகளாக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2  இடங்களில்  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டதைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். பிப்.19 -இல்  தேர்தல் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top