Close
நவம்பர் 24, 2024 12:36 மணி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பயனாளிகளுக்கு ரூ.12.76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

திருமயத்தில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிக்கிறார், அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி  பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (27.03.2022) வழங்கினார்.

பின்னர் அமைச்சர்  ரகுபகி பேசியதாவது;
தமிழக முதல்வர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டம், கணவனால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை திட்டம், விதவை உதவித்தொகை திட்டம், முதிர்கன்னி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்தொகை திட்டம், இயற்கை மரணம் உதவித்தொகை திட்டம், புதிய மின்னனு குடும்ப அட்டை பெறும் பயனாளிகள், இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் பயனாளிகள், சிறப்பு பட்டா மாறுதல் முகாம் பயனாளிகள், பட்டா மாறுதல் உத்தரவு பெறும் பயனாளிகள் ஆகிய திட்டங்களின்கீழ் மொத்தம் 732 பயனாளிகளுக்கு ரூ.12,76,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் உத்தரவின்படி, மக்களுக்காக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட இடையூராக இருக்கும் பிரச்னைகளை களைந்திடும் வகையில், அரசின் தலைமைச் செயலாளர், பல்வேறு துறை செயலார்கள் மற்றும் சென்னை, மதுரை கிளை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமானது நேற்று நடைபெற்றது.

குறிப்பாக அரசாங்கத்தை மட்டுமே நம்பியுள்ள முதியோர்கள் அனைவருக்கும், முதியோர் உதவித்தொகை கிடைத்திடவும்,  அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற கனவுத் திட்டத்தின் அடிப்படையில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு பட்டா மற்றும் இலவச வீடு வழங்கவும் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டாட்சியர் பிரவினாமேரி, ஆர்.எம்.கருப்பையா, சர்புதீன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top