தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில் வாசல் இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கவிஞர் சு.பீர்முகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் ஜீவியின் ஆனா நூல் குறித்து, கவிஞர் ராசி பன்னீர் செல்வன் விமர்சன உரையாற்றினார். கவிஞர் முத்துநிலவன் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அத்தனையும் வெறும் பசப்பு என்ற பிரளயன் பாடலோடு, யானை பிச்சை எடுக்கலாமா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கல்லூரிப் பேச்சாளர் கடலரசி, பெண் எனும் ஆளுமை என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் கீதாஞ்சலிமஞ்சன், கவிஞர் விஜய்ஆனந்த், கவிஞர் மகாசுந்தர் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
கவிஞர்கள் கதீஜாபேகம், ஜெயா, ப. வெங்கடேசன் என புதிய கவிஞர்கள் புதுக்கவிதை வாசித்தனர். கவிஞர் ஜீவி ஏற்புரையாற்றினார்.
நிகழ்வில் கவிஞர்கள் கஸ்தூரிரங்கன், துரைக்குமரன், ஆசிரியர் கு.ம.திருப்பதி, அறிவியல் இயக்க தலைவர் பாலகிருஷ்ணன், வீரமுத்து ஜெயபால், ஆசிரியை கமலா
ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக கவிஞர் காசாவயல் கண்ணன் வரவேற்றார்.
நிறைவாக கவிஞர் புதுகை புதல்வன் நன்றி கூறினார்.