Close
மே 9, 2024 9:20 மணி

ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய விழா போட்டி

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ்பாசறை மற்றும் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா

பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற தமிழ் இலக்கிய விழா போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முத்தமிழ்ப்பாசறை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ்பாசறை மற்றும் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.

ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற
தமிழ் இலக்கிய விழாவிற்கு முத்தமிழ்ப் பாசறை அறக்கட்டளை குழுத்தலைவர் மாணிக்கவேலு தலைமை வகித்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
ஆலவயல் ஊர் அம்பலம் பெரி. அழகப்பன், ஒன்றியகுழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன்,ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யகலா, முன்னாள் முத்தமிழ்ப்பாசறை தலைவர் ரமேஷ், முத்தமிழ்ப் பாசறை செயலாளர் வீரப்பன், முத்தமிழ்ப்பாசறை பொருளாளர் வெங்கடேசகுப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழ்ப்பாசறை முன்னாள் தலைவரும், கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மாரிமுத்து, அறங்காவலர் சிங்காரம், சோலையப்பன், முத்தமிழ் பாசறை தலைவர் பாலமுரளி, முத்தமிழ் பாசறை செயலாளரும் பட்டிமன்ற நடுவருமான நெ.ரா.சந்திரன், பொருளாளர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் முன்னாள் முத்தமிழ்ப்பாசறை தலைவரும் மாரீஸ் இறகு பந்து கழக தலைவருமான மருத்துவர் மதியழகன் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் முத்தமிழ் பாசறை அறங்காவலர் சி.சு.முருகேசன் தொண்டும் தோழமையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் முத்தமிழ் பாசறை அறங்காவலருமான பி.முருகேசன் நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியை தமிழ்த்துறை ஆசிரியர்கள் கண்ணதாசன், பத்மா, ஞானமணி, சரஸ்வதி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top