புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி சரக காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் உத்தரவின்படி, துணைத் தலைவர் சரவண சுந்தர் ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆலோசனையின்படி,
பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் வழிகாட்டுதலில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாணவர்களுக்கு குட்கா, புகையிலை, மது பற்றிய தீமைகள் குறித்து காவல் ஆய்வாளர் தனபாலன் விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.
மேலும் தலைமைக் காவலர் விமலாம்பாள் மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை தலைமைக் காவலர் விமலாம்பாள் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
இதில் காவலர்கள், பள்ளித்தலைமையாசிரியர்,ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.