Close
மே 20, 2024 3:02 மணி

உலக இட்லி தினம் (மார்ச்30) இன்று…!

உலக இட்லி தினம்

உலக இட்லிதினம் இன்று

தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. தென்னிந்தியர்களின்  உணவு  என்று வடஇந்தியர்களின்  மனதில் நிற்பது  இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம்.

உலக சுகாதார அமைப்பு, அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேக வைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க  பிரபலமான  உணவாக இருக்கிறது.

மார்ச் 30-ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இந்த தினத்தை 2015-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர். மல்லிப்பூ இட்லியின் நிறுவனரான இவர்.  இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கியவர்.

தற்போது பெரும்பாலும் இட்லி மாவை கடைகளில்தான் வாங்குகிறோம். கடைகளில் சோடா உப்பு சேர்ப்பதால், அவசரத்துக்கு மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே அரைத்துக் கொள்வது நல்லது.

மிருதுவான இட்லி செய்ய… இட்லி அரிசியுடன் பச்சரிசியையும் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். மூன்று கப் இட்லி அரிசி எடுத்தால் 2 கப் பச்சரிசி சேருங்கள். மொத்தம் ஐந்து கப் அரிசிக்கு ஒரு கப் முழு உளுந்து போட்டால் போதும்.

உங்களின் உளுந்து எவ்வளவு உபரி தருகிறதோ அதற்கேற்ப வும் அளவை மாற்றிக்கொள்ளலாம். இட்லி அரசி உளுந்து  இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.

உளுந்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தையத்தைம் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தையும் ஐந்து மணிநேரம் தனித்தனியாக ஊறவைத்து, முதலில் உளுந்தை, வெந்தயத் துடன் அதிகம் தண்ணீர் ஊற்றாமல், தெளித்து மட்டும் அரைத்து கெட்டியாக வைத்துக்கொள்ளவும். அதன்பின் அரிசியை அரைத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 8-9 மணிநேரம் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்திருந்தால் புளித்துவிடும். பிறகு இட்லி சுட்டால் மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும்  இட்லி இருக்கும். ஈரோடு பகுதியில் குஷ்பு இட்லி மிகவும் பிரபலமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top