Close
நவம்பர் 21, 2024 1:49 மணி

ஈரோடு-கோவை பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: ஆரத்தி எடுத்து வரவேற்ற காங்கிரஸார்

ஈரோடு

ஈரோடு- கோவை பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியதை ஆரத்தி எடுத்து வரவேற்ற காங்கிரஸார்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு – கோவை   பாசஞ்சர் ரயில் மீண்டும் தனது சேவையை  தொடங்கியதை வரவேற்கும் விதமாக மாலை மரியாதை செய்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த ஈரோடு – கோவை பாசஞ்சர் ரயிலை இயக்க நாங்கள் பலமுறை ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்ததன் விளைவாக 01/04/2022 வெள்ளிக்கிழமை காலை முதல் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து  காலை 7 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஈரோடு – கோவை  பாசஞ்சர் ரயில் என்ஜினுக்கு மாலை அணிவித்து  ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் சி.மாரிமுத்து சிறப்பு பூஜை செய்தார்.  ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரும் முன்னாள் தென்னக ரயில்வே குழு உறுப்பினருமான கே.என்.பாஷா மற்றும் நிர்வாகிகள்  பயணிகளுக்கு  இனிப்புகளை வழங்கி ரயிலை  வழி அனுப்பி வைத்தனர்.

இதில்,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மண்டலத் தலைவர்களான டி. திருச்செல்வம் எச்.எம்.ஜாபர் சாதிக், மாவட்ட பொதுச் செயலாளர்கள்  டி. கண்ணப்பன், இரா. கனகராஜ், கராத்தே யூசுப், ஏ.அன்பழகன், பி.ஆறுமுகம்,  டீக்கடை லோகு, மாவட்ட செயலாளர் கே.ஜெ.டிட்டோ.

தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், தேசிய காங்கிரஸ்(NCWC) மகளிர் தொழிலாளர் கமிட்டியின் தலைவி ஆர். கிருஷ்ணவேணி, சிறுபான்மை துறை மூத்த தலைவர் ஈ.எம்.சிராஜ்தீன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
இது குறித்து கட்சி நிர்வாகியும் முன்னாள் தென்னக ரயில்வே குழு உறுப்பினருமான கே.என்.பாட்ஷா கூறியதாவது:

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை.இதனால் ஈரோட்டிலிருந்து கோவை,திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதனால் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று முதற்கட்டமாக ஈரோடு கோவை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக ரயிலுக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்த ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

ஈரோட்டிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 9.15 மணிக்கு கோவைக்கு செல்லும். இதனிடையே ஈரோட்டில் இருந்து கோவைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலித்த நிலையில் தற்போது 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top