Close
மே 14, 2024 9:21 காலை

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் கல்வியை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட இளைஞர் மணிகண்டன்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் கல்வியை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். தமிழில் முன்னணி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவை இரு சக்கர வாகனத்தில் சென்று அண்மையில் பயணத்தை நிறைவு செய்தார்.

கடந்த வாரம் 18-ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இவர், 19-ஆம் தேதி கன்னியாகுமரி சென்று சேர்ந்தார். செல்லும் வழியில் பேருந்து நிலையங்கள், கோயில்கள் என பொது மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் பெண் கல்வியை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து மணிகண்டன்  கூறியதாவது:சென்னை முதல் கன்னியாகுமரி வரை பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம். வெறும் பைக் ரைடாக மட்டும் இல்லாமல் சமூக நலன் சார்ந்து இந்தப் பயணம் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன். அப்படி யோசித்தபோது பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என தோன்றியது.

ஏனென்னறால், இன்றும் பல்வேறு கிராமப் பகுதிகளில் பெண் குழந்தைகள் என்றால் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் இருந்து வரும் நிலை நமது தமிழ்நாட்டில் இருக்கிறது. அப்படியே அனுப்பினாலும், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஒரு சமூகத்தின் பொருளாதார, அரசியலில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் கல்வி கற்பதால் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்ப முன்னேற்றத்துக்கு பயன்படும்.

பல முன்னுதாரண பெண் ஆளுமைகள் கொண்ட மாநிலம் நமது தமிழ்நாடு. எனவே, பெண் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதை உறுதி செய்வோம். உயர்கல்வி கற்கவும் ஊக்குவிப்போம்.

இதை வலியுறுத்தியே துண்டுப் பிரசுரங்களை வினியோ கித்தேன். சிலர் வாழ்த்தினர். ஆகஸ்ட் 18 -ஆம் சென்னையில் தொடங்கிய எனது பயணம், ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்தப் பயணத்தை நிறைவு செய்ய உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நான் பணிபுரியும் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளி மாணவ-மாணவிகள் பாலியல் ரீதியிலான தொல்லை களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அடுத்த பயணம் மேற்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top