கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் தொடர்பான பிரச்னைக்து நல்ல தீர்வு காண வேண்டுமென மின்துறை அமைச்சரை துரை வைகோ நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் குறித்து துரை வைகோ (11.04.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து, விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இது குறித்து துரைவைகோ கூறியதாவது:
ஏற்கெனவே கடந்த 19.03.2022 அன்று விடுபட்ட கேங்மேன் தொழிலாளர்கள் என்னைச் சந்தித்து, தங்களது குறைகளை தெரிவித்தபோது, இது குறித்து நான் மின் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தேவைப்பட்டால் முதல மைச்சரையும் சந்திப்பேன் என்று கூறியிருந்தேன்.
அதன் அடிப்படையில், திங்கள்கிழமை கேங்மேன் பணியா ளர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.
அமைச்சர் அவர்களும், இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கமிட்டி விரைவில் தன்னுடைய அறிக்கை யை கொடுத்தவுடன், இது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப் படும் என்று தெரிவித்தார். விடுபட்ட கேங்மேன் பணியாளர் கள் குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதற்கும் நன்றி தெரிவித்தேன்.
அது போலவே மின் வாரியத்தில் பணி புரிகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்தும் பேசினேன். வாரியத்தின் நிதி நிலைமை சீரான உடன் கண்டிப்பாக இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்கின்ற உத்தரவா தத்தையும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்யக்கூடிய மின்னகம் சார்ந்த பணிகள், அதில் வருகின்ற அனைத்து புகார்களும் 99% நிறைவேற்றப்பட்டு வருவதற்காக பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, மின்துறை குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கும் என்கின்ற நோக்கத்தோடு வருகின்ற 16.04.2022 அன்று ஒரு லட்சமாவது மின் இணைப்பினை முதல்வர் துவக்கி வைக்க இருப்பதற்கு மதிமுக சார்பில் வாழ்துகளை தெரிவித்தேன்.
மதிமுக, திமுக ஆட்சிக்கு, மக்களிடம் ஒரு பாலமாக இருக்கும் என்கின்ற செய்தியையும் தெரிவித்து, அவருடைய பணிகளை பாராட்டி அவரிடமிருந்து விடை பெற்றேன்.
இந்தச் சந்திப்பின்போது, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி அந்திரிதாஸ், தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் ஆகியேர் உடன் இருந்தனர் என மதிமுக தலைமைக்கழக செயலர் துரை வைகோ தெரிவித்தார்.