Close
நவம்பர் 22, 2024 11:01 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,379  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கிய வாரியத்தலைவர் பொன்.குமார். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்,  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்.குமார் வழங்கினார்.

பின்னர், நல வாரியத் தலைவர் பொன்குமார் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சரின்  ஆணைக்கிணங்க, தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வருவதன் மூலம் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கு பயனுள்ளதாக அமையும். அதன்படி 3,315 பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்க ளுக்காக ரூ.1,43,00,000 மதிப்பீட்டிலும், 954 பயனாளிகளுக்கு கல்விக்காக ரூ.17,92,200 மதிப்பீட்டிலும்.

8 பயனாளிகளுக்கு இயற்கை மரணத்திற்காக ரூ.2,00,000 மதிப்பீட்டிலும், 101 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்காக ரூ.1,01,000 மதிப்பீட்டிலும், 1 பயனாளிக்கு திருமணத்திற்காக ரூ.3,000 மதிப்பீட்டில் என  மொத்தம் 4,379 பயனாளிகளுக்கு ரூ.1,63,96,200 மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 51,406 கட்டுமானத் தொழிலாளர் களும், 24,948 அமைப்புச்சாரா தொழிலாளர்களும் என மொத்தம் பதிவு பெற்று தொடர் புதுப்பித்தலில் 76,354 தொழிலாளர்கள் உள்ளனர்.

வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் உதவிகளான, திருமண உதவி, மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து மரணம், விபத்து ஊனம் மற்றும் இயற்கை மரணம் ஆகும்.

 பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார். இதன்மூலம் வீடற்ற தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்பட வுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்க கோரி 21 தொழிலாளர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. மேலும்  கட்டு மானத் தொழிலாளர்களின் தொழில்களுக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கு உத்தரவிட்டுள் ளார்.

எனவே இந்த நலத்திட்ட உதவிகளை பெறும் தொழிலாளர்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் பொன்.குமார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தொழிலாளர் உதவி ஆணையர் வெ.தங்கராசு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் மகேஷ்;வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top