Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

உடைகல் குவாரி விரிவாக்கம்: ஆட்சியர் தலைமையில் கிராம மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை

கல்குவாரி விரிவாக்கம் தொடர்பாக ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில்,  சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடைக்கல் குவாரி விரிவாக்கம்  செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  (04.05.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உடைக்கல் குவாரி  விரிவாக்கம்   செய்தல் தொடர்பாக இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்; மேலூர் கிராமத்தில் பயன்பாடில்லாமல் உடைக்கல் குவாரிகள் இருப்பதாகவும் அதனால் விலங்குகள் அக்குவாரிகளில் விழுந்துவிடுவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய தடுப்பு வேலி அமைக்க வேண்டுமெனவும்.

மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு வரக்கூடிய வரத்து வாரிகளை சரிசெய்து அக்குளத்தின் நீரை குடிநீர் பயன் பாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கைகளை வைத்து இந்த உடைக்கல் குவாரி விரிவாக்கத்துக்கு ஆதரவளித்து  கருத்து களை பதிவு செய்தனர். பின்னர் இக்கிராமத்திற்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர்.

பின்னர் ஆட்சியர் கவிதாராமு பேசியதாவது: இக்கூட்டத்தில் உடைக்கல் குவாரி செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம், 3 -ஆவது தளம், பனகல் மாளிகை, எண்: 1, ஜென்னிஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொது மக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்; மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு கழிவறை வசதிகள் செய்து தருமாறும்.

உடைக்கல் குவாரிகளுக்கு உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுக்கு பதிலாக மாற்று வெடிப் பொருட்களை பயன்படுத்துமாறும்  இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து  பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி இயக்குநர் (கனிமம்) விஜயராகவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர், க.ராஜராஜேஸ்வரி, வட்டாட்சியர் பெரியநாயகி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top