Close
ஜூன் 3, 2024 1:08 காலை

தஞ்சாவூரில்  முதலமைச்சரின்  காலை உணவு திட்டஉணவு தயாரிப்பு: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கவுள்ள காலை உணவுத்திட்ட உணவு தயாரிப்பை ஆய்வு செய்த ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூரில்  தமிழ்நாடு முதலமைச்சரின்  காலை உணவு திட்டஉணவு தயாரிப்பு ஒத்திகையினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  பார்வையிட்டார்.

தஞ்சாவூர் ஒன்றியம்,மாரியம்மன் கோவில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் (21.08.2023) மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  வருகின்ற (25.08.2023) அன்று காலை உணவுதிட்டப் பணிகளைதொடக்கி வைக்கவுள்ளதையொட்டி ,மாவட்டஆட்சியர்  காலை உணவு திட்ட உணவு தயாரிப்பு ஒத்திகையினை பார்வையிட்டு உணவினை சாப்பிட்டு ருசி பார்த்து ஆய்வு செய்தார்.

இந்தஆய்வின்போது ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (சத்துணவு)  அன்பரசு,மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சாந்தி,தஞ்சாவூர் வட்டாட்சியர்  சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top