Close
மே 20, 2024 2:31 மணி

தஞ்சாவூரில் மக்கள் குறை கேட்பு முகாம்: 290 பேர் கோரிக்கை மனு அளிப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாம்

தஞ்சாவூரில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான  மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில்  பல்வேறு கோரிக்கைகளுக்காக 290 பேர் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்  தலைமையில் (21.08.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய290 மனுக்களை பொதுமக்கள் மாவட்டஆட்சியரிடம் அளித்தனர்.

இம்மனுக்கள் மீதுஉரியநடவடிக்கைகள் உடனடியாக மேற் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்  உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  தெ. தியாகராஜன்,  தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்)  தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top