Close
நவம்பர் 22, 2024 12:46 காலை

பள்ளி அறிவியல் மன்றங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்: பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

புதுக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தரங்கில் பங்கேற்ற வி.பி. ஆத்ரேயா உள்ளிட்டோர்

பள்ளிகளில் செயல்பட்டு வரும் அறிவியல் மன்றங்களை மேம்படுத்தி அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் பொருளாதாரப் பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா .

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையமும் இணைந்து நடத்திய அறிவியலும் சமூகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலகத் தில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் ம.வீரமுத்து தலைமை வகித்தார்.
பொருளாதாரப் பேராசிரியர் வி.பி.ஆத்ரேயா  கலந்து கொண்டு அறிவியலும் சமூகம் என்ற தலைப்பில் பேசியதாவது அறிவொளி இயக்கம் கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டு மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனுடைய தொடர்ச்சியாக தான் இன்று அறிவியல் இயக்கம் வளர்ந்துள்ளது.  அறிவியல் இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அறிவியல் இயக்கம் மேலும் வளர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும் .

பள்ளிகளில் அறிவியல் மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் . அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட போது மக்களிடம் எவ்வாறு அவர்களின் இயல்பிலேயே பேசி எழுத படிக்க கற்றுக் கொடுத்து இயக்கத்தை வளர்த்து அதுபோல இன்று அறிவியல் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
தற்போது போலி அறிவியல் பரப்பப்பட்டு வருகின்ற கால கட்டத்தில் அறிவியலில் விழிப்புணர்வை மாணவர்க ளுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும். பொது மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் முயற்சியாக அறிவியல் கண்ணோட்டத்தில் வரலாற்றை பார்ப்பது எப்படி என்ற புத்தகம் தற்போது இன்னும் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது .
அறிவியல் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும்,இங்கு உள்ள அனைவரும் கல்வித்துறையிலும், தொழிற்சங்கத்தில் இன்னும் பிற பணிகளில் பணியாற்றி வருகிறோம். நம்மிடமுள்ள தரவுகளைப் பயன்படுத்தி அறிவியலைப் பரப்ப வேண்டும்.

சுற்றுப்புறத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து அதற்கு தீர்வு காண வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என்றுமே தனி வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு தொடர வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு புதுக்கோட்டை வரலாற்றை அறிவியல்பூர்வமாக கொண்டு செல்ல வேண்டும் கலைப் பயணம் மூலமாக அறிவியலை வளர்க்க வேண்டும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும், அறிவியலை எவ்வாறு கிராமங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது என்றும், பொருளாதாரத்தில் அறிவியல் பார்வை யுடன் செயல்பட வேண்டும்.

சமகால வரலாற்றில் அறிவியலில் போலி அறிவியல் பரப்பப்பட்டு வருகிறது . அதை தடுக்க வேண்டும். பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு பற்றி ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். பொது மக்களை அறிவியல் பார்வையுடன் அறிவியல் மனப்பான்மை ஏற்படுத்த வேண்டும்  என்றார் ஆத்ரேயா.

நிகழ்வில் கவிஞர் நா. முத்துநிலவன், தொல்லியல் ஆய்வுகள நிறுவனர் ஆ.மணிகண்டன், மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்.

மாவட்ட நிர்வாகிகள் அ.மணவாளன், க.சதாசிவம், க.ஜெயபால், ஈ.பவுனம்மாள், பேராசிரியர் எஸ்.  விஸ்வநாதன், முத்தையா, அசோகன், ஜெயபால் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். முன்னதாக கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா வரவேற்றார். நிறைவாக பொருளாளர்  டி. விமலா நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top