Close
நவம்பர் 22, 2024 5:55 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே முள்ளூர் கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமில் ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத் தொகுப்பு நிலத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (10.05.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமினை ஆட்சியர்  தொடக்கி  வைத்தார். இம்முகாமில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப் புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை.

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள், நெசவு மற்றும் காதித்துறை ஆகிய துறைகள் பங்கேற்று, துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது; விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும், விவசாய உற்பத்தி திறனை உயர்த்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி வேளாண் துறைக்கென தனிநிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களில் வேளாண்மை செய்யும் வகையிலும், தரிசு நில உற்பத்தித் திறனை மேம்படுத்திடும் வகையிலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், தரிசு நில தொகுப்புகளை உருவாக்குதல், தரிசு நில தொகுப்பு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு, சூரிய ஒளி பம்பு செட் அமைத்தல், தனிநபர் ஆதிதிராவிட விவசாயிக ளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், தனிநபருக்குபண்ணை  குட்டை அமைத்தல், சிறுபாசனக் குளம், குட்டை, வரத்துவாரி தூர்வாரி ஆழப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை கள் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டப் பணிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என  ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்தார்.

தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் ரூ.3,000 மதிப்பீட்டில் விசை தெளிப்பான், ரூ.400 மதிப்பிலான உழுந்து விதை, மகளிர் திட்டத்தின் சார்பில் 5 குழுக்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சுழல் நிதியையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.10,000 மதிப்பிலான தாது உப்பு கலவை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூ.300 மதிப்பில் காய்கறி விதைகள் தொகுப்பு என மொத்தம் ரூ. 2,63,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில்ல் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் செல்வம்.

மாவட்ட இயக்க மேலாண் அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, ஊராட்சிமன்றத் தலைவர் ஆதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top