Close
செப்டம்பர் 20, 2024 8:47 காலை

பவானிசாகர் அணைக்கு அதிகரிக்கும் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு

பவானிசாகர் அணை(பைல் படம்)

பவானிசாகர் அணைக்கு 2 -ஆவது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்கா கவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதைப்போல் 2-வது நாளாகவும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2, 253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக் காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 400 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 555 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top