Close
நவம்பர் 22, 2024 4:15 மணி

ஈரோட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்: கலக்கத்தில் வணிகர்கள்..

ஈரோடு

கள்ளநோட்டு புழக்கம்

ஈரோடு கடைவீதிகளில் கள்ள நோட்டு- போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் பெண்களால்  வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் 200-க்கும் மேற்பட்ட மொத்த மளிகை கடைகள், மிட்டாய் கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளன. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கடை வீதிகளில் கடைகளில் சில பெண்கள் போலி ரூபாய் நோட்டு, கள்ள நோட்டை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வியாபாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஒரு மொத்த வியாபார மிட்டாய் உள்ளது.இங்கு நகரின் பல பகுதியில் இருந்து வியாபாரிகள் மிட்டாய் வாங்கி செல்வது வழக்கம்.நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க வந்த பெண் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மிட்டாய் வாங்கியுள்ளார்.

அதேசமயம் வந்த வேறொரு பெண் அதே மிட்டாய் கேட்டு இரண்டாம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் பணத்தை பரிசோதனை செய்ததில் இரண்டாவது பெண் கொடுத்த ரூபாய் நோட்டு போலி என்பதை கண்டறிந்துள் ளார்.

அப்போது முதலில் பணம் கொடுத்த பெண் மிட்டாய் வேண்டாம் என கூறி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் இருவரிடமும் இருந்த மிட்டாய்களை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்து அங்கிருந்து விரட்டியுள்ளார். இதேபோல மார்கெட்டில் சில கடைகளில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவது வாங்கி மீதம் ரூபாயைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.

போலி ரூபாய் நோட்டுகளை கடை வியாபாரிகள் கண்டு பிடித்து விடக் கூடாது என்பதற்காக முதலில் ஒரு பெண் வந்து போலி ரூபாய் நோட்டுகளை கொடுப்பார். பின்னர் சிறிது நேரம் மற்றொரு பெண் வந்து உண்மையான ரூபாய் நோட்டுகளை கொடுத்து கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

இதனால் கடைக்காரர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரிடம் பணத்தை கொடுத்து விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்த பெண் சிறிதளவு பொருட்களை வாங்கி கொண்டு நல்ல ரூபாய் நோட்டுக்களை கடைக்காரரிடம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.
மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக வந்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடை வியாபாரிகள் தங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை யாராவது கொண்டு வந்தால் அதனை சரி பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள் ளனர். மேலும் மோசடி கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top