Close
செப்டம்பர் 20, 2024 7:01 காலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு…

புதுக்கோட்டை

அன்னவாசலில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமன், ஆறுமுகம், ஜெயந்தி மூவரின் கூட்டுத் தலைமையில்  நடைபெற்றது. மாநாட்டை  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பெரியசாமி தொடங்கி வைத்து அரசியல் அமைப்பு நிலை குறித்து பேசினார்.

மாவட்ட செயலாளர் மு. மாதவன் மாநிலக் குழு உறுப்பி னர்கள் கே. ஆர். தர்மராஜன், ஏனாதி ஏ.எல். ராஜு, மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் த. செங்கோடன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.சி. சோமையா, ரா. முருகானந்தம் க.சுந்தரராசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றிய செயலாளர் நா. விஜயரங்கன் வேலை அறிக்கை வைத்து பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. பாதுகாப்பு கிடங்கு வசதியுடன் அன்னவாசலில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும்
2.  அன்னவாசல் இலுப்பூர் லிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பேருந்து கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது
இந்தப் பேருந்தை உடனடியாக இயக்கிட வேண்டும்.

3. சத்தியமங்கலம் விளக்கிலிருந்து சத்தியமங்கலம், சன்னையப்பட்டி, உடையாண்டிபட்டி வழியாக மெய்வழிச்சாலை கீழக்குறிச்சி வரை செல்லக் கூடிய சாலை மிகுந்த சேதம் அடைந்துள்ளதால் உடனடியாக பிரதம மந்திரி சாலை அமைக்கும் திட்டத்தில்  p.m.c.y   தரமான சாலை அமைத்திட வேண்டும்.
4. இலுப்பூர் விராலிமலை குளத்தூர் தாலுகா பகுதி நிலங்களும் பாசனம் பெறும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரி அமைத்திட வேண்டும்.
5. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தினக்கூலி 273 ரூபாய் வழங்க வேண்டும் அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த செயல்படுத்திட வேண்டும்.

6. மாட்டு வண்டிகளி மணல் எடுப்பதற்கு குவாரிகள் அமைக்க வேண்டும்.
7. அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் வேலை வாய்ப்பளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.

8. அன்னவாசலில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு மனைவியிடமும்
வீடுகளும் அரசு செலவில் கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

9. கட்சியின் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய செயலாளராக
நாகராஜ், துணை செயலாளர்களாக சி. ஆனந்த், டி. மாரிமுத்து, பொருளாளராக எம். -மீரான்மைதீன் ஆகிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய செயலாளர் நாகராஜ் நன்றி உரையாற்றி நிறைவு செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top