Close
செப்டம்பர் 20, 2024 3:44 காலை

மோடி அரசின் மக்கள் விரோதக் போக்கைக் கண்டித்து இடதுசாரிகட்சிகள்- விசிக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மோடி அரசின் மக்கள் விரோதக் போக்கைக் கண்டித்து இடதுசாரிகட்சிகள், விசிக சார்பில் நடைபெற்றஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசுஈ சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சசி.பா.கலைவேந்தன் (தெற்கு), பாவாணன் (வடக்கு), சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் அ.இராஜாங்கம், சோதிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசு பெட்ரோல், டீசல், கேஸ் மீதான வரிகளை திருப்பப்பெற வேண்டும். பருப்பு, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். வருமானவரி வரம்புக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். வேலை உறுதித்திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசுப் பொதுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top