டெல்டா பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் (27.05.2022) தண்ணீர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ,திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர்.இரா. லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக (24.05.2022) அன்று மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சரால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையிலிருந்து (27.05.2022) மாலை 5 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது அனைத்து கிளை ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில் கீழ்கண்டவாறு நீர்பங்கீடு மேற்கொள்ளப்படும்.
காவிரி – 500 கனஅடி ( வினாடிக்கு). வெண்ணாறு – 500 கனஅடி (வினாடிக்கு), கல்லணைக் கால்வாய் – 100 கனஅடி (வினாடிக்கு), கொள்ளிடம் – 500 கனஅடி(வினாடிக்கு) 27.05.2022 மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118. அடியாகவும், நீர் இருப்பு 90 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு தங்குதடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால் நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து வழங்கப்படும்.
பருவமழைக்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைக்கப்படும் என விவசாயப்பெருங்குடி மக்களுக்கு அன்புடன் தெரிவிப்பதுடன், நீரினை சிக்கனமாக பயன்படுத்தி நீர்வளத்துறை அலுவலர்களுடன் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்துவிடப் படுவதால் கீழ்காணும் மாவட்டங்களில், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டங்கள்- சாகுபடி (ஏக்கர்) பரப்பு:
1 தஞ்சாவூர் 1 ,11, 150 ஏக்கர்.
2 திருவாரூர் 93,860 ஏக்கர்.
3 நாகப்பட்டினம் 19, 760 ஏக்கர்.
4 மயிலாடுதுறை 86,450 ஏக்கர்.
5 கடலூர் 24,700 ஏக்கர்.
6 அரியலூர் 2,470 ஏக்கர்.
மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்தி 390 ஏக்கரில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நடப்பாண்டில் (2022-2023) கல்லணையிலிருந்து காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில் ஆறுகள்,வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூ.4540.04 லட்சம் மதிப்பில் சுமார் 3753.08 கி.மீ நீளத்திற்கு சிறப்புதிட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை,மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்குகிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை பொருத்து காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக் கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைபாசனம் நடைமுறைப் படுத்தப்படும் எனதெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேளாண்துறைமற்றும் வருவாய்த்துறையின் கருத்துக்களை கேட்டறிந்துநீர் பங்கீடு மேற்கொள்ளப்படும்.பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடளுமன்றஉறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), முனைவர்.எம்.ஹெச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), அ.சௌந்தரபாண்டியன் (இலால்குடி), செ.ஸ்டாலின்குமார்(துறையூர்), எம். பழனியாண்டி (ஸ்ரீரங்கம்).
உ.மதிவாணன் (தாட்கோ தலைவர்), கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), மு. அன்பழகன் (திருச்சிராப்பள்ளி), தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.