Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

புளியமரமும், அதன் நிழலும்.. இருப்பதை பிரதிபலிக்கும் கவிதை

புளியமரமும் நிழலும்

புளியமரம் கவிதை

YOU CAN TAKE A PERSON OUT OF THE VILLAGE
BUT…,YOU CAN’T TAKE THE VILLAGE OUT OF THE PERSON”

முன் குறிப்பு: நான் கிராமத்தில் பிறந்தவனில்லை,இருந் தாலும் கிராமம் பற்றிய அழகியல் உணர்வு என்னுள்இன்னும் இருப்பதை பிரதிபலிக்கும் கவிதை இது.கற்பனை யில் உதித்ததை எழுதுவது ஒருவகை: அனுபவத்தில் ஊறிய தை எழுதுவது இன்னொரு வகை.இரண்டாவது வகை இது.

ஆம், என் தந்தை பிறந்த வட மதுரை கிராமத்தில், இன்னும் பொதுவுடைமைக்கு சாட்சியாய் இருக்கும் “புளிய மரம்” பற்றியது ஒவ்வொரு விடுமுறைக்கும் அந்த கிராமத்திற்கு தவறாது செல்வது வழக்கம். போன விடுமுறைக்கு கூட, இந்த கவிதையின் கதாநாயகன்—-“புளிய மரத்தினடியில்” அமர்ந்து தேநீர் குடித்தபோது, நெருடலாய் மனதில் நீண்ட நிதர்சனம். இங்கே கவிதையாய்…,

புளியமரமும், அதன் நிழலும்..,

ஊரின் மத்தியில் அடர்ந்து விரிந்த
புளியமரமும், சுற்றிய நிலமும் எங்கள் குடும்ப சொத்து
பாட்டிபராமரிப்பில் பல காலமாய் இருந்தது

கட்ட பஞ்சாயத்து, கெடா வெட்டு, நாடகம், வில்லுபாட்டு, கரகாட்டம், கபடி அனைத்து வைபவதிற்க்கும் புளிய மரத்தடி தான் பொதுவான இடம்

மரத்தடியில் சித்தப்பாவின் சின்ன டீக்கடை கயிற்றுக்கட்டில், நீண்டதாய் பெஞ்சு, முண்டாசு, முறுக்கிய மீசையென நாற்பதை தாண்டிய நபர்கள் கூடுவார்கள். பத்தாம் வகுப்பு படிச்ச பண்ணையார் பையன்,

தினசரி வாசிக்க சுவையாய் தேநீர் வாய்க்குள் இறங்க
சூடாய் செய்தி செவிக்குள் இறங்கும்.
வெயில் வெளியே வர மரத்தடி காலியாகும்.
மாலைக்கூட்டம் மறுபடியும் கூடும்
வெற்றிலை மென்னியபடி, காதுகளில் விழுந்த
காலைச்செய்தி கலந்துரையாடப்படும்.

வருசங்கள் வந்து போன வண்ணமிருந்தன
வருசா வருஷம், வருசத்துகாகும் புளியை கொட்டை எடுத்து கொண்டு வந்த பாட்டியில்லை..,
தேநீர் வியாபாரம் பண்ணிய சித்தப்பாயில்லை..,
ஊர்த்திருவிழாவில் நாடகத்திற்கு ஆர்மோனிய பெட்டி வாசித்த பெரியப்பாயில்லை ..,
இக்கவிதையை தந்த, என்னை தந்த எந்தந்தையில்லை..,

நிலத்தை விற்காமல்
மரத்தை விறகாக்காமல் விட்டு சென்ற பெரியவர்கள்..,
புளியமரமும், அதன் நிழலும் இன்னும் இருக்கிறது
கூடும் கூட்டத்தில்தான் பல முகங்கள் மறைந்திருந்தன.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top