தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுக்கோட்டை நகரக்கிளைசார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19.6.2022) மாலை 4 மணியளவில் மூன்று நூல்கள் அறிமுக விழா நடைபெறுகிறது.
விழாவுக்கு, நானிலம் இலக்கிய இதழாசிரியர் வபூ.மணிமொழி தலைமை வகிக்கிறார்.
எழுத்தாளர் சி. பாலையா எழுதிய கருத்தாய்வு கடிதங்கள் (கட்டுரை) எனும் நூல் குறித்து கலை இலக்கியப்பெருமன்ற நிர்வாகி கவிஞர் ச. துவாரகாசாமிநாதன் கருத்துரையாற்று கிறார்.
எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய தீவாந்திரம்(புதினம்) எனும் நூல் குறித்து கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் கருத்துரை யாற்றுகிறார். பாடலாசிரியர் பெருமாள்பட்டி அடைக்கலம் எழுதிய காத்திருந்த கண்களே(கவிதை) எனும் நூல் குறித்து கவிஞர் மூட்டாம்பட்டி ராசு கருத்துரையாற்றுகிறார்.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக நிர்வாக அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் சொ. சுப்பையா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் சுப்பிரமணியபாரதி, கவிஞர் செம்பை மணவாளன், கலை இலக்கிய திறனாய்வாளர் ஜீவாதாசன், கலைமுரசு மாத இதழாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நூலாசிரியர்கள்.. எழுத்தாளர் சி. பாலையா, பாடலாசிரியர் பெருமாள்பட்டி அடைக்கலம், எழுத்தாளர் அண்டனூர் சுரா ஆகியோர் ஏற்புரையாற்றுகின்றனர்.
நகரப்பொருளாளர் கவிஞர் ப. வெங்கடேசன் வரவேற்புரை யும், கவிஞர் மா. கண்ணதாசன் நன்றியுரையும் ஆற்றுகின் றனர். விழாவை கவிஞர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்க வுள்ளார்.