Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

பொன்னமராவதி அருகே ஆங்கிலேயர் தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு.. தொல்லியல் ஆய்வுக்கழகம் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட தொண்டைமான் மன்னர் கால கல்வெட்டு

ஆங்கிலேயர் – தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர் தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு செவலூர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சரவணன் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் , தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்தக்கலவெட்டு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை தொண்டைமான்கள் மற்றும் அங்கிலேயரிடையே இணக்கமான உறவு இருந்துள்ளதை தொடர்ந்து, இந்திய ஆட்சிப்பிரதேசத்தில் தனித்துவமிக்க நிருவாக சுதந்திரத் துடன் புதுக்கோட்டை சமஸ்தானம் செயற்பட ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது.

தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளிவாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றியதை தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரப்பட்டி எல்லைக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.
கல்வெட்டுச்செய்தி :

தமிழ்நாடு
கல்வெட்டு

1822 வருஷம் சுலாயி .மாதம் 11 சரியான தமிள் சித்திரை பானு வருஷம் ஆவணி மாதம் மதுரை சில்லாக் கலெக்கட்டர் மேஷ்த் தரவர்கள் சூபித்தார்துரையவர்களுடையஉத்தரவுப்படிக்கி மருங்கா புரி தாலுகாவுக்கு சேற்ந்த கலிங்கப் பட்டி கிராமத்து தொண்டைமானார் புதுக்கோட்டையிலா கால்லம்பட்டி (மயிசல்) செயிதுயிந்த எல்கைக்கார் திரங்கல் நடலாச்சுது என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி, 1822 -ஆம் ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவாின் உத்தரவின்படி திருச்சி மாவட்டம் மருங்காபுாி தாலுகாவைச் சேர்ந்த கலிங்கப்பட்டடி கிராமத்திற்கும் புதுக்கோட்டை தொண்டைமானார் ஆட்சி பகுதியில் உள்ள கல்லம்பட்டி கிராத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லைக் கல் நடப்பட்ட செய்திக் குறிப்பை இக்கல்வெட்டு தொிவிக்கிறது.
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்ததையும் ராஜா விஜய இரகுநாத ராய தொண்டைமான் (1807-1825) ஆட்சி காலத்தின் போது இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது என்பதை யும் வெளிப்படுத்துகிறது. இந்த களஆய்வின் போது கரகமாடி ப.சரவணன், சுப்பிரமணியன், கா.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top