பொன்னமராவதி பேரூராட்சியில் இது எங்க வீட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கென விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் தமிழக அரசின் நகர தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையில் மற்றும் துணைத்தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆகியோர் முன்னிலையில் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில், பேரூராட்சி நகர பகுதியில் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடு, என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நம் நகர மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
பேரூராட்சி 12வது வார்டில் நடைபெற்ற இது எங்க வீட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கென நடைபெற்ற விழிப்புணர்வு தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் செயல் அலுவலர் மு.செ.கணேசன் பேசுகையில், வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை வீசக்கூடாது தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வரவில்லை என்றால் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04333-263428 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். இதில் கவுன்சிலர்கள்,டெங்கு களப்பணியாளர்கள்,சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.