44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் (15.07.2022) வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 மாமல்லபுரத்தில் நடைபெறுவதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கீழ்க்கண்ட நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க இந்த ஓட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்காணிப்பில் அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி அளவில் சதுரங்கபோட்டி நடைபெறவுள்ளது.
இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் அடுத்து வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள். வட்டார அளவிலான போட்டிகள் 20.07.2022 அன்று நடைபெறவுள்ளது. வட்டார அளவிலான போட்டிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 25.07.2022 அன்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளவுள் ளார்கள்.
இப்போட்டியில் முதல் இரண்டு இடங்கள் பெறுபவர்கள், 01.08.2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நேரில் காண்பதற்கும், சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்களுடன் சதுரங்க விளையாட்டு நுணுக்கங்களைப் பற்றி கலந்துரை யாட வாய்ப்பு கிடைக்கும்.
இதை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு ஓட்டம் 15.07.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு புதுக்கோட்டை டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன் தெரிவித்துள்ளார்.