Close
நவம்பர் 22, 2024 1:31 மணி

புதுக்கோட்டையில் ஜூலை 16, 17 -ல் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொல்லியல் கழக மாநாடு

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்  16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டைதொல்லியல் கழகத்தின் 30-ஆம் ஆண்டு கருத்தரங்கம் 16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தொல்லியல் கழகத்தின் 30-ஆம் ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் ஆய்விதழ் வெளியீடு புதுக்கோட்டை சிறப்பு தொல்லியல் மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

மேலும் தொல்லியல் ஆய்வில் அரும்பங்காற்றிய நபர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டு,  தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும்  விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய நெல் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

 தொழில்துறை அமைச்சர் மாநாட்டை தொடங்கி வைத்தும்,
சட்டத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
ஆகியோர் தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தும் சிறப்பிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், மூத்த தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top