Close
ஏப்ரல் 11, 2025 12:33 மணி

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை

புதுக்கோட்டை

தேசிய பளுதூக்கும் போட்டியில் வெற்ற புதுக்கோட்டை மாணவி பிரியாவை வாழத்துகிறார், ஆட்சியர் கவிதா ராமூ

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை பிரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 19.6.2022.  ஆம் தேதி நடைபெற்ற கேலோ இந்தியா  திட்டம் சார்பில் மகளிர் தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் பளு தூக்குதல்  போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 76 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவி  பிரியா வெண்கல பதக்கம் பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்,

இந்த மாணவி தொடர்ந்து இரண்டாவது முறையாத தேசிய பதக்கங்களை பெற்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர். வெற்றி பெற்ற மாணவியை நேரில் அழைத்து  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வாழ்த்தினார்.

இதில், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர்  குமரன், புதுக்கோட்டை மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளர் முத்துராமன் சமூக ஆர்வலர் புதுகை செல்வா, புதுக்கோட்டை மாவட்ட பளுதூக்கும் பயிற்சியாளர் , மற்றும் சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top