Close
ஏப்ரல் 6, 2025 12:28 காலை

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள்: காமராஜர் பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை

மதுரை

மதுரை காமராஜர் பல் கலைக்கழகம்

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள் செயல்படுதாகவும் அதை நம்பி ஏமாற வேண்டுமெனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்   எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர்(பொ)  எம். சிவகுமார் வெளியிட்ட தகவல்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான சேர்க்கை மையங்கள் என்று சட்டவிரோதமாக விளம்பரப்படுத்திக் கொண்டு சிலதனியார் நிறுவனங்கள் தேனியில் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தேனியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ளவர்கள் வசதிக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில்’ மட்டும்தான் நடைபெற்று வருகிறது.

உயர்கல்வியில் சேர விரும்பும்  மாணவர்கள் நேரடியாக  பல்கலைக்கழகத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தின் மாலை நேரக் கல்லூரியையோ (MKL-EVENING COLLEGE THENI) தொடர்பு கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்..

போலியான, சட்ட விரோதமான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top