Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

தாகூர் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி…

அலமாரியிலிருந்து புத்தகம்

ரவீந்திரநாத்தின் கீதாஞ்சலி

வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை . பிறகு தாகூரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்கத்திய நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின.

அதன் விளைவு தான் கீதாஞ்சலிக்குக் கிடைத்தது நோபல் பரிசு. நம் மொழியில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கான ஆகக்கூடிய தகுதிகள் பல படைப்புகளுக்கு இருந்தாலும், அதை அந்த இடத்திற்கு எடுத்து செல்ல தவறிவிடுகிறோம்.

ரகுமானுக்கு முன்னரே இசையில் பல சாதனைகளை செய்துவிடட இளையராஜாவுக்கு அப்போதே ஆஸ்கர் விருது கிடைத்திருக்கலாம், உரிய இடத்திற்கு கொண்டு செல்கிற வழிமுறையை அறிய தவறியது தான் நம் பிழை. எந்த படைப்பாளியும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பதில்லை.

விருதுகள் மட்டுமே ஒரு படைப்புகளை உயர்த்தி காட்டி விடாது. இருப்பினும் அங்கீகாரம் என்பது படைப்பாளிக்கு இந்த சமூகம் செய்கிற மரியாதை. அதை செய்ய தவறினாலும் அவன் இயங்கி கொண்டேதான் இருப்பான்.

களைத்து மயங்கும் இரவில்
சளைத்து,
உன்னை நம்பி
பொறுப்பை எல்லோம் உன்மேல்
போட்டு விட்டு,
நித்திரையில் என்னைத் தள்ளி
புரண்டு போராடாமல்
பொத்தெனச்
சாய வேண்டும் நான்!

– இப்படியான கீதங்களின் தொகுப்பை வாய்க்குபோதெல்லாம், நாலுவரி வாசியுங்கள்

இங்கிலாந்திலிருந்து  சங்கர் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top