Close
மே 20, 2024 5:49 மணி

ஆர்.கே.நாராயண் எழுத்துகளை கல்லூரி நாட்களில் தேடித்தேடி வாசித்து முடித்தோம்….

இலக்கியம்

மால்குடி நாட்கள்

ஆர்.கே.நாராயண் எழுத்துகளை கல்லூரி நாட்களில் தேடி தேடி வாசித்து முடித்தோம்.

இவரை பற்றி பேசும் போது மால்குடி என்கிற வார்த்தையை தவிர்த்து விட்டு பேச இயலாது. மால்குடி எப்படி உருவானது என்று, நேர்காணலில் அவரிடம் கேட்டபோது ஒரு சின்ன ரயில் நிலையம் இருக்க வேண்டும்.

அதில் சில மரங்கள் இருக்க வேண்டும். அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்துக்கு சுவாமியும் அவனது நண்பர்களும் அடிக்கடி சென்று வருவார்கள். இந்த ரயில் நிலையம் உண்மையில் இல்லாத ஊரின் பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியையும், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மாங்குடியையும் சேர்த்து மால்குடி என்று உருவாக்கினேன் என்று கூறுவார். தனது பெரும்பாலான கதைகளில் இந்த மால்குடியைப் பயன்படுத் தியதால் இவரின் வாசகர்களுக்கு மால்குடி உண்மையான ஊராகவே ஆனது. அந்த மால்குடிக்கு இன்று வரை நாயகன் இவர்தான்.

ஆர்.கே.நாராயண் அவர்களை பேசுகிற போது, அவரது நண்பர் எழுத்தாளர் கிரஹாம் கீரினையும் பேச வேண்டும். ஆர் கே என் படைப்புகள் அவரின் சொந்த பிராந்திய அனுபவத்தில் இருந்து வருபவை. அதனால் அவர் ஆங்கிலத்தில் எழுதினாலும் அது அமைதியான, தெளிவாக அமைந்தது. அந்த ஆங்கில நடை தமிழோடு மிகவும் நெருக்கமானது!  என்று ஆங்கில அறிவுலகுக்கு அறிமுகப்படுத்திய கிரஹாம் க்ரீன் எழுத்தைப்பற்றிச் சொன்னார்.

கூடவே நீங்கள் கவனக்குறைவான ஓர் எழுத்தாளர். சில சமயங்களில், நீங்கள் சரியான வார்த்தையைக்கூட எழுத முயல்வதில்லை. ஒரு வரியை குழப்பமில்லாமல் எழுதி முடிக்க, நீங்கள் முயல்வதில்லை  என்று விமர்சித்திருக்கிறார். ஆர்.கே. நாராயணனின் எழுத்துகளை வாசித்து பிரமித்து போன கிரஹாம் கிரீன், இங்கிலாந்தில் தன் பதிப்பாளர்களை கொண்டு வெளியிட செய்தார். மால்குடி நம் நினைவில் என்றும் இருப்பது போல், இந்த கதை சொல்லியும் இருப்பார்.

இங்கிலாந்திலிருந்து…சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top