Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

ஈரோடு

பெxருந்துறை அருகே கீழ்பவானி ஆற்றின் கரைகள் உடைந்ததால் நிலங்களுக்கும் பாய்ந்தோடிய வெள்ளம்

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு
500 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து  கீழ்பவானி (எல்பிபி) வாய்க் காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, திருப்பூர், கரூர்மாவட் டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாச னம் பெறுகின்றன.

நடப்பாண்டு முதல் போக பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலின் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்ன சமுத்திரம் இரட்டைமடை மதகுகளுக்கு ஆகஸ்ட் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறந்த சில தினங்களிலேயே பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பிறகு நசியனூர் பகுதியிலும், கடந்த அக்டோபர் மாதம் சத்தியமங்கலம், செண்பகபுதூர் மாரப்பநகர் பகுதியிலும் என 4 இடங்களில் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட து.

இந்நிலையில் எல்பிபி வாய்க்காலின் 54 -ஆவது கிலோ மீட்டரில் பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை 4.30 மணி அளவில் வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

வாய்க்காலில் 1300 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் நீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்டதும் பயங்கர வேகத்துடன் தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

தொடர்ந்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் இடதுகரை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.வாய்க்காலில் இருந்து வெளியேறி தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக மூலக்கரை, கதிரம்பட்டி, நஞ்சனாபுரம் வழியாக செங்கோடம்பாளையம் பள்ளத்தை நோக்கி சென்றது.

அப்பகுதிகளில் பயிரிடப்பட்ட 500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள், நெல் பயிர்கள் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர்  அருகில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் தண்ணீர் புகுந்தது இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 30 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களை மீட்டனர்.  இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பவானிசாகர் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டு, அதற்கு முன்பாக உள்ள கிளை வாய்க்கால்களில் ஆங்காங்கே தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈரோடு
பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுப்புறப் பகுதிக ளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் வாய்க்காலின் இருபுற கறைகளிலும் திரண்டு வந்து உடைப்பை வேடிக்கை பார்த்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருந்துறை தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வாய்க்காலின் இரு கரைகளிலும் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக குவிந்ததால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு மக்களை அப்பகுதிக்குள் வர விடாமல் தடுத்தனர். கீழ் பவானி வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top