Close
நவம்பர் 22, 2024 11:54 காலை

சிவகங்கை மாவட்டத்தில் பட்டு வளர்ப்பில் சாதனை: விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பட்டு வளர்ப்பில் சாதனை படைத்த விவசாயிக்கு பரிசளிக்கிறார்

சிவகங்கை பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப் புழு வளர்த்து பட்டுக் கூடு அதிக மகசூல் பெற்ற மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட  ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கி தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில், விவசாயத்திற்கு தனி கவனம் செலுத்தி விவசாயிக ளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனைடிப்படையில், பட்டு வளர்ச்சித்துறை சார்பாக காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றமைக்காக விவசாயி  மு.குமார் முதல் பரிசு ரூ.25,000 ம்.

சிவகங்கை வட்டம், கூத்தாண்டண் கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றமைக்காக அமுதாராணி எனும் விவசாயி,    இரண்டாம் பரிசு ரூ.20,000 ம்.

காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றமைக்காக விவசாயி  ராமைய்யா மூன்றாம் பரிசுக்கான   பரிசுத் தொகை ரூ.15,000 -க்கான காசோலைகளையும், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top