பவானிசாகர் வட்டாரத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நொச்சி குட்டை கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு புஞ்சை புளியம்பட்டி துணை வேளாண் அலுவலர் த.பாலாஜி தலைமை வகித்து பேசுகையில் , குழுவின் நோக்கம் குறித்தும், வேளாண்மை துறையில் வழங்கப்பட்டு வரும் இடுபொருட்கள், மானிய விவரங்கள் குறித்தும், உழவன் செயலி குறித்தும், சிறுதானிய சாகுபடியின் முக்கியத்துவம் குறித்தும், மண் மாதிரி எடுத்தல் மற்றும் பி.எம். கிஷான் திட்டம் குறித்தும் விளக்கினார்.
ஜே.கே.கே. வேளாண் கல்லூரி உழவியல் துறை உதவி பேராசிரியர் சரத்குமார், பயிர்களுக்கான உளவியல் முறை குறித்தும், பயிரைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகள் குறித்து, பயிற்சி வழங்கினார்.
விதைச்சான்றிப்புத் துறை வேளாண்மை அலுவலர் ஹேமாவதி, விதை பண்ணை அமைத்தல் மற்றும் அங்ககச் சான்று பெறுதல் குறித்து பயிற்சி வழங்கினார். உதவி தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியம், தோட்டத்துறை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை குழு துறையின் சார்பாக உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்து பேசினார். அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து கருணாம்பிகை விளக்கிப் பேசினார்.
இக்குழுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை உதவி தேட்டக்கலை அலுவலர் வேலுமணி மற்றும் அட்மா பணியாளர் கருணாம்பிகை ஆகியோர் செய்திருந்தனர்.