Close
நவம்பர் 21, 2024 5:29 மணி

புதிய முகவரியில் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் புதிய முகவரியில் திறக்கப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்

புதுக்கோட்டையில் புதிய முகவரியில்    எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்    திறப்பு விழா திங்கள்கிழமை  நடைபெற்றது.

புதுக்கோட்டை  எஸ்.எஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார்.

முன்னோடி விவசாயி ச.வே.காமராசு முன்னிலை வகித்தார் புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எம்.பெரியசாமி, இந்திய விவசாய சங்கத்தின் பொது செயலாளர் மற்றும் முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி ஆகியோர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து  வாழ்த்தினர்.

வேளாண்மை இணை இயக்குநர் பேசுகையில்,எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்காகவும், கிராமப் புற மக்களுக்காகவும் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செய்ல்படுத்தி வருகின்றது.

புதுக்கோட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுக ளுக்கு வேளாண்மைத்துறை தேவையான ஒத்துழைப்பை நல்கும் என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்  பேசுகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரிவடைந்துள்ளது.

விரைவில் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி” என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. எனவே புதிய திட்டங்களுக்கு வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பிளாட் எண் 44, எஸ்.எஸ் நகர் என்ற புதிய முகவரியில் செயல்படும்.  எப்பொழுதும்போல் அனைத்துதரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை
திறப்பு விழாவில் பங்கேற்ற சான்றோர்கள்

நிகழ்வில், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.முத்துகுமார், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், கவிஞர்.நா.முத்துநிலவன், ஆசிரியர் மனசு பெட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார்.

அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மேகலாமுத்து, அறிவியல் இயக்க முன்னோடி லெ.பிரபாகரன், வேளாண்மை அலுவலர் சி.முகமது ரபீக், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் க. சதாசிவம், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜோயல்பிராபகரன், வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன், கவிஞர்.மு.கீதா உள்ளிட்டோர்  வாழ்த்திப் பேசினர்.

நிகழ்வில் விவசாயிகள், ஊராட்சி பிரதிநிதிகள், அறிவியல் இயக்க பிரதிநிதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆசிரியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா  வரவேற்றார். நிறைவில் தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top