Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

காந்திகிராம் வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் நுணுக்க பயிற்சி..!

நாற்று நடும் வேளாண் மாணவி

சோழவந்தான் அருகே காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னங்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி, விவசாயி ரெங்கன் தோட்டத்தில் தென்னங்கன்று நடவு முறைகளையும், எவ்வாறு தென்னங் கன்றுகளை தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் விளக்கியதோடு அதன் பராமரிப்பு முறைகளையும் விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.

விவசாயிகளும் பயிற்சி மாணவிகளும் சேர்ந்து தென்னங்கன்றுகளை வாழை தோட்டத்தின் இடையில் ஊடுபயிராக நடவு செய்தனர். இதே போல், தென்கரை விவசாயி கார்த்திகேயன் நிலத்தில் ஆர். என். ஆர். ரக நெற்பயிர்களை நாற்றங்காலில் மாணவிகள் பேராஜெஸிந், இந்திராணி, கோமுகி, முத்துலட்சுமி,பபிதா ஆகியோர் நடவு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top