Close
நவம்பர் 21, 2024 3:32 மணி

சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு வெண் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை

சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் நடைபெற்ற  பட்டு வளர்ப்பு பயற்சி முகாம்

சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் சிவகங்கை  வட்டார பட்டு வளர்ச்சித் துறையின்  வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை  முகமை விரிவாக்க செயல் திட்டத்தின் கீழ் நவீன வெண்பட்டு புழு வளர்ப்பு தொழிநுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமுக்கு, பட்டு வளர்ச்சி உதவி இயக்குநர் ( திண்டுக்கல்)  எம். கணபதி தலைமை வகித்து பேசுகையில்,மல்பெரி சாகுபடி செய்தல்,பட்டு புழு வளர்ப்பு பட்டு வளர்ப்பின் முறைகள் பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை பற்றிய  விளக்கமளித்தார்.

சிவகங்கை உதவி ஆய்வாளர் டி. முத்துக்குமார் பட்டு புழு வளர்ப்பு அறைகள் பராமரிப்பு முறைகள், பட்டுக் கூடு உற்பத்திக்குப் பிந்தைய தொழில் நுட்ப திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

ஏற்பாடுகளை இளநிலை ஆய்வாளர் எம். ஷேக் ஆசீப், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர்  ஆ, ராகவ் ஆகியோர் செய்தனர், இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top