Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பிக்க வேண்டும்: புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத் தில் புதுப்பித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் 57 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தவிர 5 இறால் பண்ணைகள் பதிவு செய்திட மாவட்ட அளவுக் குழுவினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து இறால் பண்ணைகளில் பதிவு காலம் முடிவுற்றுள்ளது.

எனவே, அனைத்து இறால் பண்ணைகளின் பதிவு உரிமத் தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பித்திட வேண்டும். மேலும் எவ்வித பதிவு செய்யப் படாமலும் இறால் பண்ணைகள் இயக்கத்தில் உள்ளதாக அறிய வருகிறது. இவ்வாறு செயல்படும் இறால் பண்ணைகள் உடனடியாக இறால் வளர்ப்பு பணிகளை நிறுத்த வேண்டு மென அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படாமல் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைச் சட்டம் 2005 பிரிவு 14-ன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் பிரிவு 15-ன் படி தகுதியான நீதிமன்றத்தில் குற்றத்தை பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட உறுப்பினர் செயலரான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தினை கடுமையாக செயல்படுத்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தினால் அறிவுறுத்தப் பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளை உடனடி யாக பதிவு செய்திடவும் மற்றும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை புதுப்பித்திடவும் இறால் பண்ணை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.

தவறினால் மேற்படி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு,  தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top