Close
செப்டம்பர் 18, 2024 3:32 காலை

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய இங்கிலாந்து வேளாண் விஞ்ஞானிகள்

புதுக்கோட்டை

வம்பன்புஷ்கரம் வேளாண்கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இங்கிலாந்து வேளாண் விஞ்ஞானிகள் முனைவர்.ஜென்னரோஸ், லூரா ஒயிட் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை வம்பன் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் இங்கிலாந்து நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் –  மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இங்கிலாந்து நாட்டில் செயல்படும் ”பயிர் நலன் மற்றும் பயிர்பாதுகாப்பு” நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் முனைவர்.ஜென்னரோஸ், லூரா ஒயிட் மற்றும் கேபி நிறுவனத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் வினோத்பண்டிட், மாளவிக்கா சௌத்திரி, கிர்திகா கண்ணன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானிகள் ஆர்.ராஜ்குமார்,  கோபிநாத் ஆகியோர் புதுக்கோட்டை, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர்.

புதுக்கோட்டை
புதுகை வம்பன் புஷ்கரம் வேளாண்கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல்

முனைவர்.ஜென்னரோஸ், பேசுகையில், வேளாண்மைப் படிப்பை தேர்ந்தெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் விளைச்சலையும், வருமானத்தையும் உயர்த்த உங்களாளான முயற்சிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விஞ்ஞானிகள், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

ஒரு மாணவனிடம் நீங்கள் ஏன் வேளாண் படிப்பை தேர்ந்தெடுத்தீர்கள் என்று விஞ்ஞானி லூரா ஒயிட் ஒரு மாணவியிடம் கேட்டார். அதற்கு அவர், நான் வேளாண்மை குடும்பத்தை சார்ந்தவன். வேளாண் தொழிலில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை கண்கூடாக பார்த்தேன். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால் நான் ஒரு வேளாண் பட்டதாரி ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் நான் இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தேன் என்று அந்த மாணவன் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

புதுக்கோட்டை
வம்பன் புஷ்கரம் வேளாண்கல்லூரி மாணவிகளுடன் இங்கிலாந்து நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள்

பின்னர் கல்லூரியின் ஆய்வுக்கூடங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களை பார்வையிட்டனர். கல்லூரியின் செயலாளர் எம். ராஜாராம் கல்லூரியின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
இந்த கல்லூரி அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்படுகின்றது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று பாராட்டினர். கல்லூரி செயலாளர் எம். ராஜாராம் அனைவரையும் வரவேற்றார். உதவிப்பேராசிரியர் என். திவ்யபாரதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top