Close
மே 16, 2024 7:33 மணி

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்  (31.01.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்ள். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 878.97 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 95.67 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.

இருந்த போதிலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழைப்பொழிவு 373.00 மி.மீ-ஐ விட 62.68 மி.மீ குறைவாக 310.32 மி.மீ மட்டுமே 26.12.2022 வரை பெறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை 0.44 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023ஆம் ஆண்டில் டிசம்பர்; மாதம் முடிய நெல் 97341 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1677 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 2874 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 10252 எக்டர் பரப்பிலும், கரும்பு 2119 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 113 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12505 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 152.726 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46.845 மெ.டன் பயறு விதைகளும், 14.347 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 3.872 மெ.டன் சிறுதானிய விதைகளும், 2.603 மெ.டன் எள் விதைகளும் 9.810 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நவரை பருவத்திற்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 45, கோ 51, ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜனவரி-2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2275 மெ.டன்களுக்கு, இதுவரை 1176 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 895 மெ.டன்களுக்கு 185 மெ.டன் வரப்பெற்றுள்ளது.

பொட்டாஷ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கின்படி 625 மெ.டன்களுக்கு இதுவரை 85 மெ.டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்;ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1980 மெ.டன்களுக்கு இதுவரை 643 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3728 மெ.டன்னும், டிஏபி 1113 மெ.டன்னும், பொட்டாஷ் 718 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 4164 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 820 மெ.டன் யூரியா, 303 மெ.டன் டிஏபி, 278 மெ.டன் பொட்டாஷ், 877 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 42 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000ஃ- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 – மூன்று தவணைகளாக ஏப்ரல், ஆக்ஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம், மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1979 பயனாளி களுக்கு 2233 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 கோடியே 26 இலட்சம்;; நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்;டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் தென்னை மரங்களை தாக்கும் தென்னை வாடல் நோயினை கட்டுப்படுத்திட டிரைக்கோடெர்மா விரிடி எனும் பூஞ்சான வகை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் எக்டருக்கு 4 கிலோ, தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்திட மெட்டிரைசியம் அனிசோபிலோ என்ற உயிரியில் காரணிகள் எக்டருக்கு 4 கிலோ ஆகியன விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 72,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top