புதுக்கோட்டை மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில், சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (18.04.2022) விருதுகள் வழங்கினார்.
தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல், பண்ணை இயந்திர மயமாக்குதல், நீர் மேலாண்மையில் ஊடு பயிர், கலப்பு பயிர், பல அடுக்குப் பயிர் முறைகளை பின்பற்றுதல், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடி செய்யும் சிறந்த விவசாயி களுக்கு சான்றிதழ்களுடன் கூடிய ரொக்கப் பரிசு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப் பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.15,000 -மும், குளவாய்பட்டியை சேர்ந்த அர்ஜுனன் என்ற விவசாயிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000 -மும், காடம்பட்டியை சேர்ந்த சாந்தி என்ற விவசாயிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000 -மும் என மொத்தம் ரூ.30,000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, உதவி இயக்குநர்கள் மா. கார்த்தி ப்ரியா (புதுக்கோட்டை), ஏ.காளிசரண் (கறம்பக்குடி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.