Close
செப்டம்பர் 18, 2024 12:32 காலை

மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க மானியம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

புதுக்கோட்டை

மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களை
மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை மானியத் தில் அமைக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டைதமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள்” மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22 -ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு 22 மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க ரூ.1.01  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று இலாபம் பெற்றிட மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங் களான சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம்.

தானியம் அரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம்.

வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் இயந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்த வகை இயந்திரங்கள் எவ்வளவு எண்கள் தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படு கிறது.

மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20மூ மானியம் வழங்கப்படுகிறது.
மானிய விலையில் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பின்வரும் அலுவலங்களை அணுகலாம்.

உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை புதுக்கோட்டை  (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோ கர்ணம்)  மற்றும் அறந்தாங்கி (இராஜேந்திரபுரம்) அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in  என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top