புதுக்கோட்டை புத்தகத் திருவிழா முதல் நாள் நிகழ்வில்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்களின் சிறப்பு நடனம் நடைபெற்றது.
புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்ற புதுக்கோட்டை ஐந்தாவது புத்தகத் திருவிழாவின் 10 நாள்களுக்கும் மாலை நிகழ்வில் பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
விழாக்குழுவின் அறிவிப்பின்படி முதல் நாள் நிகழ்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை என்ற பாடலோடு புத்தக வாசிப்பை நேசிக்கும் உணர்வுள்ள பாடல் மற்றும் பெண் கல்வியின் அவசியம் ஆகிய கருத்துள்ள நடனங்கள் இடம்பெற்றன. மாணவ மாணவியர்களின் நிகழ்வானது புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துதாகவும் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது.
விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் இந்நிகழ்வை பாராட்டினர். நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன், வீரமுத்து, மணவாளன் உட்பட அறிவியல் இயக்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமா னோர் கலந்து கொண்டு நடனமாடிய குழந்தைகளை பாராட்டினர்.