Close
செப்டம்பர் 20, 2024 8:33 காலை

புத்தகம் அறிவோம்… “நாகசாமி முதல்…”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம். நாகசாமி முதல்..

“நாகசாமி முதல்…”என்ற தலைப்பில் உள்ள இந்த நூல் எழுத்தாளர் ராம்குமார் தான் சந்தித்து, உரையாடிய 62 பிரபலங்களின் உரையாடல்களை தொகுத்து தந்தது.

சமயச் சொற்பொழிவாளர்கள், கிருபானந்தவாரியார் தொடங்கி, தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையா ளர்கள், பதிப்பாளர்கள், தொழில் முன்னோடிகள், தேசிய இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என்று பல்துறை அளுமைகள் இதில் இடம்பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக கிருபானந்த வாரியார், மகாத்மாகாந்தியின் தனிச் செயலாளராக இருந்த கல்யாணம், தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்,

வரலாற்றாய்வாளர்கள் நாகசாமி, சிவனடி கல்வியாளர்கள் வ.செ. குழந்தைசாமி, மால்கம் ஆதிசேசைய்யா, பதிப்பாளர் கள் லிப்கோ வரதன், பாரி நிலையம் செல்லப்பன், பத்திரிக்கை ஆசிரியர் குமுதம் எஸ்.ஏ.பி., சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ.சிவஞானம், தொழில் அதிபர்கள் ஜி.ஆர்.டி தங்க மாளிகை ராஜேந்திரன், பிரின்ஸ் ஸ்வல்லர்ஸ் பிரின்ஸ், கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஸ்மன். இவர்களில் பலர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், சிலர், தன்னுடைய ஆதர்ஸ நாயகரைப்பற்றியும், மறக்க முடியாத நாள், வெற்றி ரகசியம் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே எப்படி?
வாரியார்: முதல் காரணம் மனம். என் மனம் எப்போதும் முருகனையே சேவித்து வருவதால் அது இளமையுடன் இருக்கிறது. அடுத்தது உணவுக்கட்டுப்பாடு. பால், நெய், கிழங்கு வகைகளை அறவே விலக்கி வருகிறேன்.

திரு.கல்யாணம்… “காந்தி காலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்… சுதந்திரம் வாங்கும் அன்று “நீங்கள் டெல்லிக்கு வாருங்கள்.” என்று நேருஜி, படேல் போன்ற தலைவர்கள் காந்திஜியை அழைத்தார்கள்.” எனக்கு இங்கே வேலை இருக்கிறது.

கொண்டாட்டங்கள், விழாக்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை யில்லை.” என்று சொல்லிவிட்டு கல்கத்தாவிலேயே தங்கி விட்டார். எல்லா நாளையும் போல இந்தியாவின் சுதந்திர நாள் அவருக்கு சாதாரணமாகக் கழிந்தது.”

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்….”நான் போற்றும் லட்சிய புருஷர் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களே! அவர் தனிமனிதர் மட்டுமல்லாது, மகத்தான தத்துவமாக இருந்தவர்… காந்தியத் தத்துவம் சுதந்திரம் வாங்குவதற்கு மட்டுமல்லாது, வாங்கிய சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கும் பயன்படக்கூடியது.

இதில் உள்ள பலர் இப்போது இல்லையென்றாலும் அவர்களின் வாழ்க்கை வருங்கால சந்ததிக்கு வழிகாட்டக்கூடியது. பெரும்பாலான உரையாடல் நடராஜன் நடத்திய “புதிய பார்வை”யில் வந்தது. கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வெளியீடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top