Close
அக்டோபர் 5, 2024 6:39 மணி

புத்தகம் அறிவோம்… ஊற்றுக்கண்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

அரவிந்தன் – பூரணி – என்ற பெயர்களை பிறந்த குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த பல குடும்பங்கள் தான் – குறிஞ்சி மலராகி இன்றும் தமிழ்கூறும் நல்ல உலகை, அதன் ரசனையை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

இந்தத் தொடர்கதை ( குறிஞ்சிமலர்) வெளிவந்த காலங்களில் நான் இருகூர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந் தேன்.வயதுக்கு மீறிய தமிழ் ஆர்வம் அரவிந்தனையும், பூரணியையும் என் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புள்ள நடமாடும் மனிதர்களாகவே தோன்ற வைத்தது(பக். 15).

“ஊற்றுக்கண்” நூல் ஆசிரியரை மட்டுமல்ல பல ஆயிரக்க ணக்கான வாசகர்களை அப்படித் தான் எண்ணத் தோன்றியது. எங்கள் கிராமத்திலிருந்து முதன் முதலில் அமெரிக்கா சென்றிருக்கும் ‘அரவிந்தன்’ பெயரும் அப்படி வைக்கப்பட்டது தான்.

நா.பா.என்று சுருக்கமாக அழைக்கப்படும் நா.பார்த்தசாரதி படைத்த குறிஞ்சிமலர், பொன்விலங்கு மிகச்சிறந்த நாவல்கள். குறிஞ்சி மலரில் வரக்கூடிய அரவிந்தன் – பூரணி, பொன்விலங்கு சத்தியமூர்த்தி போன்று நாம் வரவேண்டும் என்ற சிந்தனையை அன்றைய இளைஞர்களிடையே விதைத்த நாவல்கள் அவை.

அந்தச் சூழலில் எத்தனையோ கதாநாயகர்கள் புதினங்க ளில் நம்மை மயக்கி வைத்திருந்தாலும், குறிஞ்சி மலர் அரவிந்தனும், பொன்விலங்கு சத்தியமூர்த்தியும் அமர்ந்த சிம்மாசனங்கள் – இன்று வரை தமிழர்களது சிம்மாசனங் களில் நிலைத்து நிற்கின்றன” என்று நூலாசிரியர் தனது முன்னுரையில் கூறுவது உண்மை.

நா.பா.வின்,
குறிஞ்சிமலர்.
பொன் விலங்கு,
துளசி மாடம்,
ஆத்மாவின் ராகங்கள்,
சாயங்கால மேகங்கள்,
சமுதாய வீதி.
மணிபல்லவம், பாண்டிமாதேவி,
சத்திய வெள்ளம்,
நெற்றிக்கண்,
பிறந்த மண்,
ராணி மங்கம்மான், வஞ்சிமாநாகரம், கபாடபுரம், வெற்றி முழக்கம்,நித்திலவல்லி ஆகிய நாவல்கள் மற்றும் சில சிறுகதைகள், குறு நாவல்கள் இவற்றை, இன்றைய இளையோர்கள் வாசிக்க வேண்டும் என்ற நோக்கிலும், வாசித்தவர்களை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும் எழுதப்பட்டுள்ள அறிமுக, ஆய்வு நூல் இது.
‘இலக்கிய சிந்தனை’ அமைப்பின் தலைவர் ப.லெட்சுமணன் செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று எழுப்பட்ட நூல்.

” ஊற்றுக்கண்” நூலாசிரியர், இயகோகா சுப்பிரமணியம் கோவையின் புகழ்பெற்ற தொழிலதிபர். ஒரு தொழிலதிபரின் இலக்கியத்திறனாய்வு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
நா.பா.வின் நூல்களை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் அருமையான நூல்.

முதலில் இது ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பின்வழி பிரசுரிக்கப்பட்டு,தற்போது, ‘மாதம் ஒரு புத்தகம்’என்ற திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் சிறுவாணி வாசகர் மையம் வழி மறுபதிப்பு கண்டுள்ளது.சிறுவாணி வாசகர்மையம்,கோயம்புத்தூர். 94881854920 / 9940985920.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top