Close
நவம்பர் 21, 2024 5:49 மணி

புத்தகம் அறிவோம்… ஜவஹர்லால் நேரு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

நீங்கள் இந்தியாவின் இளைஞர் இயக்கத்தின் தலைவர்கள்; பலமான ஜீவனுள்ள இயக்கத்தைக் கட்டியிருக்கிறீர்கள். ஆனால் ஸ்தாபனங்களும், நிறுவனங்களும் மனித னுடைய கருவிகள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மாபெரும் சக்தியினால் முன்னே செலுத்தப்படுகின்றபோது தான் அவை வாழ்கின்றன, வாழ்க்கையை மேம்படுத்த அவசியமாகின்றன.மாபெரும் லட்சியங்களை உங்கள் முன்வைத்துக் கொள் ளுங்கள். இழிவான சமரசங்களின் மூலம் அந்த லட்சியங்களைத் தாழ்த்திவிடாதீர்கள்.

நம் நாட்டின் வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் லட்சக்கணக்கான மக்கள் உழைத்து உருக்குலைவதைப் பாருங்கள். இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் இதே மாதிரியான பிரச்சினைகளுடன் போராடுவதைப் பாருங்கள். தேசிய உணர்ச்சியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தொன்மையான தாய் நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுகின்ற புதல்வர்களாக புதல்விகளாக ஆகுங்கள். சர்வதேசிய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். நாட்டு எல்லைகளுக்கும் இனங்களுக்கும் அப்பாற்பட்ட எல்லாவித மான அடிமைத்தனம் மற்றும் அநீதிகளிலிருந்து உலகம் விடுதலை அடைவதற்குப் பாடுபடுகின்ற இளைஞர் குடியரசின் உறுப்பினராகுங்கள்.

“மாபெரும் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால் எனக்கு மரணமில்லை என்று நினைத்து ஒருவன் வாழ வேண்டும் ” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சுக்காரர் கூறினார். நம்மில் எவரும் மரணத்திலிருந்து தப்ப முடியாது.” – இது 1928, டிசம்பர் 12 ஆம் நாள்,ஜவஹர்லால் நேரு, பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து.

ஜவஹர்லால் நேரு- போராட்ட கால சிந்தனைகள், நேரு 1927 – 1947 காலகட்டதில் எழுதிய கட்டுரைகள், நிகழ்த்திய உரைகளில் அடங்கிய முக்கியமான கருத்துக்களில் சில-
தன்னைப் பற்றி, சுதந்திரத்திற்கான போராட்டம், சோஷலிசமும் திட்டமிடுதலும்,மதம், பண்பாடு, மற்றும் வகுப்பு வாதம், சர்வதேச அரசியல்,மக்கள் உரிமைகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 6 தலைப்புகளில்தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைகளை முழுமையாக வாசிக்கும்போது அவர், இந்த தேசத்தையும் மக்களையும் எவ்வளவு நேசித்திருக்கிறார் என்பது புலப்படும். அவர் இந்தியாவின் முன்னேற்றத்தை மட்டும் சிந்திக்கவில்லை உலக முழுவதும் இருக்கும் மக்களைப் பற்றியும் சிந்திக்கும் உலகக் குடிமகனாகவும் இருந்திருக்கிறார் என்பதை உணரமுடியும்.

இன்று , 14.11.2023, ‘நவீன இந்தியாவின் சிற்பி’ ஜவஹர்லால் நேருவின் 135 -வது பிறந்த நாள். குழந்தைகள் தினம். அவரின் இந்த பிறந்த நாளில் அவர் கனவுகண்ட சாதி சமய மற்ற, அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்ட தேசத்தை உருவாக்க உறுதி ஏற்போம். வெளியீடு-நேஷனல் புக் டிரஸ்ட், புது டெல்லி.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top